Enable Javscript for better performance
ரத்த தான முகாம்- Dinamani

சுடச்சுட

    

    வாணியம்பாடி இசுலாமியா கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற ரத்த தான முகாமில் , 70 மாணவர்கள் ரத்த தானம் அளித்தனர்.

    முகாமுக்கு கல்லூரி முதல்வர் பிரேம் நசீர் தலைமை வகித்தார். நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர் அ.முகமதுஅலி வரவேற்றார்.

    வாணியம்பாடி அரசு மருத்துவமனையின் மருத்துவர் தன்வீர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் ரத்த தானம் பெற்றனர்.

    நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர் குண்டுஆரிப், ரோட்டரி சங்க நிர்வாகிகள் லியாகத் அலிகான், முபாரக் அலி, முஜ்பூர் ரகுமான், பிலால் அகமது, மொய்தீன் காதர், இம்ரான் உள்ளிட்டோர் கலந்து

    கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai