Enable Javscript for better performance
விபத்தில் புது மாப்பிள்ளை சாவு- Dinamani

சுடச்சுட

    

    அரக்கோணத்தை அடுத்த பெருமூச்சியைச் சேர்ந்த பெருமாளின் மகன் தொழிலாளி மணிகண்டன் (28), விபத்தில் இறந்தார்.

    இவருக்கும், திருத்தணியை அடுத்த கோரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரிக்கும் 14 நாள்களுக்கு முன் திருமணம் ஆனது.

    இந்நிலையில், மணிகண்டன் திங்கள்கிழமை மனைவியை மாமியார் வீட்டில் விட்டுவிட்டு பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். மூன்றாவது மைல் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது, பைக்கும், எதிரே வந்த பால்வேனும் மோதிக் கொண்டன. இதில், மணிகண்டன் சம்பவ இடத்திலேயே இறந்தார். விபத்து குறித்து அரக்கோணம் தாலுகா காவல் ஆய்வாளர் கிருஷ்ணகுமார் வழக்குப் பதிந்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai