சுடச்சுட

    

    அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக மாதம் ரூ.3,050 வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் வேலூரில் புதன்கிழமை போராட்டம் நடத்தினர்.
     ஆட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற இப்போராட்டத்தில் சிஐடியூ மாவட்டச் செயலர் என்.காசிநாதன் தொடக்கவுரையாற்றினார். தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் சங்க மாநிலச் செயலர் என்.சுசீலா நிறைவுரையாற்றினார்.
     சிஐடியூ மாவட்டத் தலைவர் எம்.பி.ராமச்சந்திரன், அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எம்.சிலுப்பன், உழைக்கும் பெண்கள் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஏ.குப்பு, சங்கத்தின் துணைச் செயலர் என்.கமலவேணி உள்ளிட்டோர் போராட்டத்தில் பங்கேற்றனர்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai