சுடச்சுட

    

    திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் மாதனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை தொடங்கியது.
     அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டத்தின் கீழ் ஜூலை 30-ம் தேதி வரை 9 மற்றும் 10-ம் வகுப்பு பட்டதாரி ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெறுகிறது. மாதனூர் அரசுப் பள்ளியில் நடைபெறும் பயிற்சி முகாமில் தமிழ், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்கள் குறித்த பயிற்சி அளிக்கப்படுகிறது.
     பயிற்சி முகாமை திருப்பத்தூர் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவி தொடங்கி வைத்தார். மாதனூர் அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் வில்வநாதன் மற்றும் மாதனூர், குடியாத்தம், ஆலங்காயம், பேர்ணாம்பட்டு, நாட்டறம்பள்ளி உள்பட 6 ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த 100 ஆசிரியர்கள் பயிற்சி முகாமில் கலந்து கொண்டனர்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai