Enable Javscript for better performance
ஆற்காட்டில் புதிய மருத்துவமனை திறப்பு- Dinamani

சுடச்சுட

    

    ஆற்காட்டில் ஸ்ரீ லட்சுமி லோகநாதன் மருத்துவமனையை எம்.எல்.ஏ. வி.கே.ஆர்.சீனிவாசன் புதன்கிழமை திறந்துவைத்தார்.
     ஆற்காடு ஸ்ரீ லட்சுமி அம்மாள் கல்வி அறக்கட்டளையின் சார்பில் இந்த மருத்துவமனை நிறுவப்பட்டுள்ளது.
     இதன் திறப்பு விழாவில் வாலாஜா தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தின் பீடாதிபதி முரளிதர சுவாமிகள், கலவை சச்சிதானந்த சுவாமிகள் ஆகியோர் சிறப்பு பூஜைகள் செய்தனர். இதனைத் தொடர்ந்து ஆற்காடு தொகுதி எம்.எல்.ஏ. வி.கே.ஆர்.சீனிவாசன் குத்துவிளக்கேற்றி மருத்துவமனையைத் துவக்கி வைத்தார்.
     விழாவில் ஸ்ரீ லட்சுமி அம்மாள் கல்வி அறக்கட்டளை தலைவர் டி.எல்.பாலாஜி, செயலாளர் சாந்தி பாலாஜி, திருமதி லட்சுமி லோகநாதன் கல்வி அறக்கட்டளை தலைவர் டி.லோகநாதன், துணைத் தலைவர் லட்சுமி லோகநாதன், இணை இயக்குநர் டி.ஏ.எஸ்.குமார், திமிரி ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவர் சி.சரவணகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai