சுடச்சுட

  

  அரக்கோணம் ரயில் நிலையத்தில் சரக்கு ரயிலின் என்ஜின் தடம் புரண்டது.
   ஒடிசாவிலிருந்து அரக்கோணத்தில் உள்ள இந்திய உணவுப் பொருள் பாதுகாப்புக் கிடங்குக்கு 42 பெட்டிகளை கொண்ட சரக்கு ரயில் புதன்கிழமை வந்தது. இதில் 12 பெட்டிகளை கழற்றி கிடங்கு பகுதிக்கு அனுப்பும் பணி நடைபெற்ற போது திடீரென சரக்கு ரயிலின் என்ஜின் தடம் புரண்டது. இதையடுத்து முதன்மை ரயில் என்ஜின் ஆய்வாளர் தேவசகாயம், போக்குவரத்து ஆய்வாளர் மனோகரன் உள்ளிட்டோர் அப்பகுதிக்கு விரைந்து சென்று என்ஜினை பாதைக்குக் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டனர்.
   பாதிப்பில்லை: இச்சம்பவம் அரக்கோணம் ரயில் நிலையப் பணிமனைப் பகுதியில் நடைபெற்றதால் ரயில் போக்குவரத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai