Enable Javscript for better performance
சேங்குன்றம் மனுநீதி நாள் முகாமில் 26 பேருக்கு நல உதவி- Dinamani

சுடச்சுட

    

    சேங்குன்றம் மனுநீதி நாள் முகாமில் 26 பேருக்கு நல உதவி

    By  குடியாத்தம்  |   Published on : 11th July 2013 08:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குடியாத்தத்தை அடுத்த சேங்குன்றம் ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 26 பயனாளிகளுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.
     மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கோ.சுப்பிரமணி தலைமை வகித்து, பயனாளிகளுக்கு நல உதவிகள் வழங்கினார்.
     வட்டாட்சியர் எம்.கஜேந்திரன் வரவேற்றார். ஊராட்சி மன்றத் தலைவர் நாகவேணி சொக்கலிங்கம், ஒன்றியக் குழு உறுப்பினர் எஸ்.எல்.எஸ்.வனராஜ், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் எஸ்.எஸ்.ரமேஷ்குமார், ஊராட்சி மன்றச் செயலர் மகேந்திரன், வட்ட வழங்கல் அலுவலர் மகாலட்சுமி, வருவாய் ஆய்வாளர் அன்பழகன், கிராம நிர்வாக அலுவலர்கள் குணசேகரன், எம்.புலிதேவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai