தோல் தொழிற்சாலை தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்தம் செய்ய முடிவு
By வேலூர் | Published on : 11th July 2013 07:59 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
தோல் தொழிற்சாலை தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு, போனஸ் உயர்வு ஆகியவற்றை வலியுறுத்தி ஜூலை 30-ம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தம் செய்வதென டேனரி தொழிலாளர்களின் கூட்டுக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
இக்கூட்டம் சிஐடியூ மாவட்ட அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடந்தது. சிஐடியூ மாவட்டத் தலைவர் எம்.பி.ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். சிஐடியூ சார்பில் ஜி.லதா, ஏஐடியூசி சார்பில் எஸ்.ஆர்.தேவதாஸ், ஐஎன்டியூசி சார்பில் ஆர்.கோவிந்தசாமி மற்றும் பிற சங்க நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.
டேனரி தொழிலாளர் ஊதிய உயர்வு, போனஸ் உயர்வு தொடர்பாக சென்னையில் தொழிலாளர் நலத் துறை அலுவலகத்தில் 10 முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இருப்பினும் தொடர்ந்து டேனரி நிர்வாகம் ஊதிய உயர்வு வழங்க மறுத்து வருகிறது. எனவே நியாயமான ஊதிய உயர்வு, போனஸ் வழங்க வலியுறுத்தி வரும் 30-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்வது என முடிவு எடுக்கப்பட்டது.
ஜூலை 22, 23-ம் தேதிகளில் வாணியம்பாடி, ஆம்பூர், பேர்ணாம்பட்டு, ராணிப்பேட்டை, விஷாரம் பகுதிகளில் கோரிக்கைகள் தொடர்பாக பிரசாரம் செய்வது, ஜூலை 26 மற்றும் 29-ம் தேதிகளில் வாணியம்பாடி, ஆம்பூர், பேர்ணாம்பட்டு, ராணிப்பேட்டை பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.