Enable Javscript for better performance
நிம்மியம்பட்டு அரசுப் பள்ளிக்கு கலையரங்கம்: எம்.எல்.ஏ. வாக்குறுதி- Dinamani

சுடச்சுட

    

    நிம்மியம்பட்டு அரசுப் பள்ளிக்கு கலையரங்கம்: எம்.எல்.ஏ. வாக்குறுதி

    By  வாணியம்பாடி,  |   Published on : 11th July 2013 08:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வாணியம்பாடியை அடுத்த நிம்மியம்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
     நிகழ்ச்சிக்கு நிம்மியம்பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் மீனா ஏசு தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட வாணியம்பாடி எம்.எல்.ஏ. கோவி.சம்பத்குமார் 198 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கி வாழ்த்தி பேசுகையில், நிம்மியம்பட்டு, வள்ளிப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு சட்டப் பேரவை உறுப்பினர் தொகுதி நிதியின் மூலம் கலையரங்கம் கட்டும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றார்.
     நிகழ்ச்சியில் ஆலங்காயம் ஒன்றியக்குழுத் தலைவர் எம்.கோபால், மாவட்ட கவுன்சிலர் கே.பி.ஜெயசக்தி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கே.பி.மணி, வேலாயுதம், ஜெகதா, நிம்மியம்பட்டு அரசு மருத்துவர் பசுபதி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் செல்வம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai