சுடச்சுட

  

  பழங்குடியினருக்கு தாமதமின்றி  ஜாதிச் சான்று வழங்க பாஜக கோரிக்கை

  By  அரக்கோணம்  |   Published on : 11th July 2013 07:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வேலூர் மாவட்டத்தில் வசிக்கும் பழங்குடியினத்தவருக்கு தாமதமின்றி ஜாதிச் சான்றிதழ்களை வழங்க வேண்டும் என அரக்கோணத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வேலூர் கிழக்கு மாவட்ட பாஜக எஸ்.சி., எஸ்.டி. பிரிவுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
   கூட்டத்துக்கு மாவட்ட பாஜக எஸ்.சி.,எஸ்.டி பிரிவின் தலைவர் ஜி.ஜே.அருண் திருமலை தலைமை தாங்கினார். பாஜக சென்னை கோட்டப் பொறுப்பாளர் தசரதன், வேலூர் கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் பாபாஸ் பாபு, மாவட்ட பொதுச் செயலர் முத்துகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் வேலூர் கிழக்கு மாவட்ட எஸ்.சி., எஸ்.டி. பிரிவின் மாவட்ட பொதுச் செயலராக ஏ.வேலாயுதம், துணைத் தலைவர்களாக எஸ்.சரஸ்வதி சீனிவாசன், ஏ.சித்ரா அன்பு, செயலர்களாக குமரேசன், பிரகாசம், கெüரி, பொருளாளராக தங்கராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai