சுடச்சுட

    

    புது மணத் தம்பதியை  வழிமறித்து தங்கச் சங்கிலி பறிப்பு

    By  குடியாத்தம்  |   Published on : 11th July 2013 07:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆந்திர மாநிலம் பலமநேரை அடுத்த ஜல்லிபேட்டையைச் சேர்ந்தவர் ரமேஷ் (28). கேபிள் டி.வி. தொழில் செய்யும் இவருக்கும், குடியாத்தத்தை அடுத்த கல்லப்பாடியைச் சேர்ந்த குணசேகரன் மகள் நந்தகுமாரிக்கும் (23) கடந்த மே 29ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.
     இவர்கள் இருவரும் பலமநேரியிலிருந்து மோட்டார் சைக்கிளில் கல்லப்பாடிக்கு புதன்கிழமை வந்துள்ளனர்.
     சைனகுண்டா அடுத்த ஆம்பூரான்பட்டி அருகே வந்தபோது, எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் இவர்களை வழிமறித்து தாக்கிவிட்டு, ரமேஷ் கழுத்தில் இருந்த இரண்டரை பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தலைமறைவாகி விட்டார்களாம். இதுதொடர்பாக குடியாத்தம் தாலுகா போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai