Enable Javscript for better performance
பெண்ணிடம்  5 பவுன் நகை பறிப்பு- Dinamani

சுடச்சுட

    

    சோளிங்கரில் திருமணத்துக்குச் சென்று திரும்பிய பெண்ணிடம் 5 சவரன் நகையை பைக்கில் வந்த மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.
     வாலாஜா வட்டம் வேலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (35). இவரது மனைவி விஜயா (30). இவர்களது உறவினர் திருமணம் சோளிங்கரில் உள்ள திருமண மண்டபத்தில் புதன்கிழமை நடந்தது.
     இதையொட்டி மணமக்கள் வரவேற்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. இதில் விஜயா மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டுவிட்டு வேலம் செல்ல சோளிங்கர் கருமாரியம்மன் கோயில் கூட்டு ரோடு அருகே இரவு 9 மணி அளவில் பஸ்ஸýக்காக காத்திருத்தினர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு மர்ம நபர்கள் விஜயாவின் கழுத்திலிருந்த 5 சவரன் நகையைப் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர். அப்போது விஜயா கூச்சலிட்டார். கூச்சல் சப்தம் கேட்டு விஜயாவின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மர்ம நபர்களைப் பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் தப்பி விட்டனர்.
     இச்சம்பவம் குறித்து சோளிங்கர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai