Enable Javscript for better performance
லாரி மீது கல்வீச்சு: மூவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    ஆம்பூரில் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற லாரி மீது கல் வீசி தாக்கியதாக மூவரை ஆம்பூர் டவுன் போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனர்.
     சென்னையிலிருந்து பெங்களூர் நோக்கி ஒரு லாரி செவ்வாய்க்கிழமை இரவு சென்று கொண்டிருந்தது. ஆம்பூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு அருகே லாரி வந்தபோது மூன்று இளைஞர்கள் லாரி மீது கல் வீசி தாக்குதல் நடத்தினராம். அதில் லாரியின் கண்ணாடி உடைந்து சேதமடைந்துள்ளது.
     இதுகுறித்து லாரி டிரைவர் பச்சையப்பன் ஆம்பூர் டவுன் போலீஸில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி லாரி மீது கல்வீசியதாக ஆம்பூர் நடராஜபுரம் பகுதியைச் சேர்ந்த குமரவேல், சுபாஷ், கார்த்திக் ஆகிய மூவரையும் கைது செய்தனர்.
     எதற்காக லாரி மீது கல்வீசினர் என்பது குறித்து அவர்களிடம் விசாரணை நடைபெற்றுவருகிறது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai