Enable Javscript for better performance
அத்தனாவூரில் இந்தியன் வங்கிக் கிளை தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    அத்தனாவூரில் இந்தியன் வங்கிக் கிளை தொடக்கம்

    By வாணியம்பாடி  |   Published on : 12th July 2013 03:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    : வாணியம்பாடியை அடுத்த ஏலகிரிமலையில் உள்ள அத்தனாவூர் கிராமத்தில் இந்தியன் வங்கியின் புதிய கிளை வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

    வங்கி தலைமைப் பொதுமேலாளர் அறிவானந்தம் தலைமையில் நடைபெற்ற விழாவில், இக்கிளையை மக்களவை உறுப்பினர் தா.வேணுகோபால் குத்துவிளக்கேற்றித் திறந்து

    வைத்தார் .

    இதையடுத்து, வங்கி சார்பில் 15 மாணவர்களுக்கு ரூ.55 லட்சத்தில் கல்விக்கடனும், தாட்கோ திட்டத்தின் கீழ் ஒருவருக்கு ரூ.2 லட்சத்தில் கடனும் வழங்கப்பட்டன.

    வேலூர் மண்டலத்தின் 89-வது கிளையாகவும், வேலூர் மாவட்டத்தின் 50-வது கிளை வங்கியாகவும் இவ்வங்கிக் கிளை உள்ளது என வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    வங்கியின் மண்டல மேலாளர் எம்.நாகராஜன், கிளை மேலாளர் எ.சிவகுமாரன், திருப்பத்தூர் நகர்மன்றத் தலைவர் அரசு, ஏலகிரி ஊராட்சி மன்றத் தலைவர் அச்சுதானந்தன், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர்கள் பொன்னுரங்கம், கோவிந்தன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai