சுடச்சுட

    

    சிப்பாய் புரட்சியின் வரலாற்றை மாணவர்கள் அறிய வேண்டும்

    By வேலூர்,  |   Published on : 12th July 2013 03:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வேலூர் கோட்டை சிப்பாய் புரட்சியின் வரலாற்றை அனைத்து மாணவர்களும் அறிந்திருக்க வேண்டும் என விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் கூறினார்.

    வேலூர் சிப்பாய் புரட்சி நினைவு கருத்தரங்கம் காட்பாடி ஆக்சிலியம் மகளிர் கல்லூரியில் புதன்கிழமை நடத்தப்பட்டது.

    இதில், ஜி.விசுவநாதன் பேசியதாவது:

    இந்திய விடுதலை போராட்டத்தில், 1806ஆம் ஆண்டு ஜூலை 10ஆம் தேதி நடைபெற்ற வேலூர் கோட்டை சிப்பாய் புரட்சியின் வரலாற்றை அனைத்து மாணவர்களும் அறிந்திருக்க வேண்டும். போராடிப் பெற்ற சுதந்திரத்தை பாதுகாப்பதோடு, நாட்டின் முன்னேற்றத்துக்கும் மாணவர் சமுதாயம் எதிர்காலத்தில் பங்கேற்க வேண்டும் என்றார்.

    முன்னதாக, வேலூர் சிப்பாய் புரட்சியை சித்தரிக்கும் வகையிலான ஓவியங்களை நாட்டு நலப்பணித் திட்ட மாணவியர் ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

    இக்கருத்தரங்குக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள்-கலைஞர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ச.ஆறுமுகம் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் யூஜினி பாத்திமா மேரி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் முத்து.சிலுப்பன், கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் அமுதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai