சுடச்சுட

    

    தடையை மீறி 3 இடங்களில் ஆர்ப்பாட்டம்: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கைது

    By வேலூர்,  |   Published on : 12th July 2013 03:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வேலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் தடையை மீறி வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றதாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் 219 பேர் கைது செய்யப்பட்டனர்.

    கெüரவக் கொலைகளை கண்டித்து நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, காவல்துறை அனுமதி அளிக்கவில்லை.

    வேலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரே நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வந்த மாநகர் மாவட்டச் செயலர் நீல.சந்திரகுமார் தலைமையிலான கட்சியினர் 123 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இதேபோல், திருப்பத்தூரில் ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற 57 பேரும், வாணியம்பாடியில் 39 பேரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai