சுடச்சுட

    

    துவரை சாகுபடியை ஊக்குவிக்க மானிய விலையில் விதைகள் விநியோகம்

    By குடியாத்தம்  |   Published on : 12th July 2013 03:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் பயறு வகை சாகுபடியை ஊக்குவிக்க, பேர்ணாம்பட்டு வட்டாரத்தில் சுமார் 500 ஹெக்டேர் பரப்பில் துவரை சாகுபடி செய்ய மானிய விலையில் விதைகள் விநியோகிக்கும் பணி புதன்கிழமை தொடங்கியது.

    பேர்ணாம்பட்டு வேளாண்மை விரிவாக்க மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஒன்றியக் குழுத் தலைவர் பொகளூர் டி. பிரபாகரன் தலைமை வகித்தார். விவசாயிகளுக்கு விதைகளை வேளாண்மை உதவி இயக்குநர் ஈ. ராஜேஸ்வரி வழங்கினார் . பின்னர் பயன் தரும் பயிறு திட்டம் என்ற தலைப்பில் துவரை சாகுபடி செய்வது குறித்து அவர் விளக்கம் அளித்தார்.

    எல்.ஆர்.ஜி. 41 வகை துவரை விதைகள் 50 சதவீத மானியத்திலும், நுண்ணுயிர், நுண்ணூட்டச் சத்து உரங்கள், பயிர் பாதுகாப்பு மருந்துகள் மானிய விலையில் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

    வட்டார வேளாண்மை அலுவலர் பி. சுஜாதா, துணை வேளாண்மை அலுவலர் எச்.ஆர். மணி, உதவி வேளாண்மை அலுவலர்கள் ராஜேந்திரன், சங்கர், வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai