சுடச்சுட

  

  திருவாதிரை வழிபாட்டு அடியார்கள் திருக்கூட்டத்தினர் சார்பில், அரக்கோணம் ஸ்ரீவரசித்தி விநாயகர் கோயிலில் ஸ்ரீகாசி விசாலாட்சி உடனுறை ஸ்ரீகாசி விஸ்வநாதர் சன்னிதியில் மாணிக்கவாசகர் சுவாமிகள் குருபூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

  "திருவாசகமும் மணிவாசகமும்' எனும் தலைப்பில் பனப்பாக்கம் எஸ்.வி.சண்முகம் உரையாற்றினார். இதைத் தொடர்ந்து, சிவனடியார்களால் திருவாசக முற்றோதல், சிறப்பு அபிஷேகம், சுவாமிகள் திருமேனி திருவீதியுலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

  கே.செல்வகுமரன், சைவ சித்தாந்த நேர்முக பயிற்சி மைய நிர்வாகி எம்.என்.கோபால், ஆர்.சாரங்கபாணி, கே.எஸ்.ஆறுமுகம், கே.செல்வராஜ், எம்.சந்திரசேகரன்,ஏ.ஹரிபாபு, வி.சங்கர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

  ஆம்பூரில்..

  ஆம்பூர் நாகநாத சுவாமி திருக்கோயிலில் மாணிக்கவாசகர் குருபூஜை விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

  விழாவையொட்டி, மாணிக்கவாசக சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன.  இரவு 7 மணிக்கு சுவாமி திருவீதி உலா உலா நடைபெற்றது. 

  முன்னதாக, முனைவர் புரிசை நடராஜன் பங்கேற்ற சிறப்பு சொற்பொழிவு புதன்கிழமை நடைபெற்றது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai