Enable Javscript for better performance
முன்னாள் படைவீரர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை- Dinamani

சுடச்சுட

    

    முன்னாள் படைவீரர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை

    By வேலூர்,  |   Published on : 12th July 2013 03:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முன்னாள் படைவீரர்களின் குறைகளை தகுதியின் அடிப்படையில் சிறப்பு நேர்வாகக் கருதி நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் பொ.சங்கர் கூறினார்.

    வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற முன்னாள் படை வீரர்கள், படையில் பணிபுரிவோர் மற்றும் அவர்தம் குடும்பங்களைச் சார்ந்தோருக்கான குறைதீர் முகாமில், ஆட்சியரிடம் 108 மனுக்கள் அளிக்கப்பட்டன.இம்மனுக்களைப் பெற்ற ஆட்சியர் மேற்கண்டவாறு கூறினார்.

    இதையடுத்து, 2 முன்னாள் படைவீரர்களின் மகள்களுக்கு திருமண நிதியுதவியாக தலா ரூ.10 ஆயிரம், இறந்த முன்னாள் படைவீரர் ஈமச்சடங்கு நிதியுதவியாக தலா ரூ.5 ஆயிரம் 16 விதவையருக்கும், ஒருவருக்கு ராணுவ மைய நல நிதியுதவியாக ரூ.5 ஆயிரமும் ஆட்சியரால் வழங்கப்பட்டது.

    மாவட்ட முன்னாள் படைவீரர் நல துணை இயக்குநர் து.பிரகாசம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai