சுடச்சுட

    

    : வழக்குகளை சட்ட ரீதியாகச் சந்திப்போம் என்று பாமக தலைவர் ஜி.கே.மணி கூறினார்.

    வேலூர் மத்தியச் சிறையில் உள்ள பாமக நிர்வாகிகளை வியாழக்கிழமை சந்தித்தப் பின்னர், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

    பாமக நிர்வாகிகள் பலர் குண்டர், தேசிய பாதுகாப்புச் சட்டங்களில் மீண்டும் கைது செய்யப்படுவதற்கு அரசு அதிகாரிகளே உடந்தையாக உள்ளனர். தமிழக அரசு சட்டத்தை மதிக்கவில்லை. அதிமுக அரசு எதிர்க்கட்சிகள் செயல்படக் கூடாது என்பதற்காக அவற்றின் மீது அடக்குமுறையை ஏவிவிட்டுள்ளது. ஜனநாயக ரீதியாக ஆர்ப்பாட்டம், போராட்டங்களை நடத்துவதற்கும் இந்த அரசு தடை விதிக்கிறது.

    பாமகவினர் மீது போடப்படும் வழக்குகளை சட்டரீதியாக சந்திக்க தயாராக உள்ளோம். பொது சொத்துகளுக்கு நாசம் விளைவித்ததாக ரூ.100 கோடி வழங்கக் கோரி வழக்குத் தொடர்ந்துள்ளார்கள். இது அதிமுகவுக்கும் பொருந்தும்.

    இம்மாதம் 24ஆம் தேதி நடைபெறும் இவ்வழக்கு விசாரணைக்கு கட்சியின் நிறுவனர் டாக்டர் ச.ராமதாஸ் பங்கேற்க வாய்ப்பில்லை. அவர் மருத்துவ சிகிச்சையில் உள்ளார். அவரது சார்பில் வழக்குரைஞர் இவ்வழக்கில் அன்றைய தினம் ஆஜராவார். கிரிமினல் வழக்குகளில் தண்டனை பெற்றால், பதவி பறிப்பு மற்றும் தேர்தலில் போட்டியிட தடை என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம் என்றார் மணி.

    முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஆர்.வேலு, அணைக்கட்டு எம்எல்ஏ ம.கலையரசு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai