சுடச்சுட

    

    காவேரிப்பாக்கத்தை அடுத்த சித்தஞ்சி காளி கோயில் அருகே வியாழக்கிழமை ஏற்பட்ட விபத்தில், இளைஞர் இறந்தார்.

    38 வயது மதிக்கத்தக்க இவர் சாலையில் நடந்து சென்றபோது, சென்னையிலிருந்து வேலூரை நோக்கிச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இவர் யார் என்பது குறித்து காவேரிப்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர். 

    மின்சாரம் பாய்ந்து முதியவர் சாவு

    அரக்கோணம், ஜூலை 11: அரக்கோணம் சுவால்பேட்டை தாசில்தார் தெருவைச் சேர்ந்த சீதாராமன் (85), மின்சாரம் பாய்ந்து இறந்தார்.

    இவர் ரயில்வேயில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். வியாழக்கிழமை காலை தனது வீட்டின் மாடியில் மழைநீர் வெளியேறும் இடத்தில் அடைப்பை நீக்க முயன்றபோது, மின்சாரம் பாய்ந்ததாம். இதில், அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    கிணற்றில் விழுந்து முதியவர் சாவு

    ஆம்பூர், ஜூலை 11: ஒடுக்கத்தூரைச் சேர்ந்தவர் சாமிநாதன் (65). இவர் ஜூலை 9ஆம் தேதி ஒடுக்கத்தூர் பேரூராட்சி கிணற்றில் கால் தவறி விழுந்தாராம். வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    விபத்தில் தொழிலாளி சாவு

    ராணிப்பேட்டை, ஜூலை 11: சிப்காட் வ.உ.சி. நகரைச் சேர்ந்த சுரேஷ்குமார்(18), அமர்நாத் (26) ஆகிய இருவரும் தனியார் தொழிற்சாலையின் தொழிலாளர்கள்.

    இவர்கள் புதன்கிழமை இரவு சிப்காட்டில் இருந்து ராணிப்பேட்டையை நோக்கி பைக்கில் சென்றனர். அப்போது பாரதி நகர் இஎஸ்ஐ மருத்துவமனை வளைவில் திரும்பும்போது, சாலையோர பள்ளத்தில் பைக் கவிழ்ந்ததாம். படுகாயம் அடைந்த இருவரும் வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சுரேஷ்குமார் வியாழக்கிழமை இறந்தார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai