சுடச்சுட

  

  ஆந்திர மாநிலத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பந்த் காரணமாக, வேலூர் மாவட்டம் வழியாக ஆந்திர மாநிலத்துக்குச் சென்ற அனைத்து பஸ்களும் மாலை 6 மணி வரை ரத்து செய்யப்பட்டன.

  ஆந்திர மாநிலத்தில் தனி தெலங்கானா உருவாவதை எதிர்த்து, ஒருங்கிணைந்த ஆந்திர மாநில கூட்டுக்குழு மற்றும் மாணவர் சங்கங்கள் சார்பில்  13 மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை பந்த் நடத்தப்பட்டது.  இதனால், வேலூர் மாவட்டம் வழியாக சித்தூர், திருப்பதி மற்றும் பிற இடங்களுக்குச் சென்ற அனைத்து அரசு, தனியார் பஸ்கள் காலை முதல் நிறுத்தப்பட்டன. மாலை 6 மணிக்கு மேல் ஆந்திர மாநிலத்துக்கு பஸ்கள் இயக்கப்பட்டன.

  பகலில் திருப்பதி செல்லும் பஸ்ஸýக்கு காத்திருந்த பெரும்பாலான பயணிகள் காட்பாடியிலிருந்து ரயில் மூலம் திருப்பதி புறப்பட்டுச் சென்றனர். இதனால் வழக்கத்தைக் காட்டிலும், அதிக கூட்டம் திருப்பதி பயணிகள் ரயிலில் நிரம்பி வழிந்தது. ஆந்திர மாநிலத்தை நோக்கிச் சென்ற சரக்கு லாரிகள் மாவட்ட எல்லையில் நீண்ட தூரத்துக்கு சாலையின் இருபுறமும் நிறுத்தப்பட்டிருந்தன. மாலை 5 மணியளவில் அவை ஆந்திர மாநிலத்தை நோக்கி புறப்பட்டன.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai