சுடச்சுட

    

    ஐம்பொன் சிலைகள் திருட்டு:தடயவியல் நிபுணர்கள் ஆய்வு

    By வேலூர்,  |   Published on : 13th July 2013 03:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருப்பத்தூர் அருகே கும்மிடிகாம்பட்டி கிராமத்தில் உள்ள  இரு கோயில்களில் ஐம்பொன் சிலைகள் செவ்வாய்க்கிழமை இரவு திருடு போனது தொடர்பாக, தடயவியல் நிபுணர்கள் இக்கோயில்களில் வெள்ளிக்கிழமை தடயங்களை சேகரித்தனர்.

    அருகருகே அமைந்துள்ள பெருமாள் கோயில், திரெüபதி அம்மன் கோயில் ஆகிய  இக்கோயில்களில் பெருமாள், ருக்மணி தேவி ஐம்பொன் சிலைகள், வெள்ளி பிரபாவளி, சுவாமி முகம், வெள்ளி கிரீடம் மற்றும் ரொக்கம் உள்பட ரூ.3.50 லட்சம் மதிப்பிலான பொருள்கள் திருடு போயிருந்தன.

    இதுகுறித்து கந்திலி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், திருப்பத்தூர் டிஎஸ்பி நாகராஜன் உத்தரவின்பேரில், தடயவியல் நிபுணர்கள் வெள்ளிக்கிழமை இரு கோயில்களிலும் தடயங்களை சேகரித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai