சுடச்சுட

  

  : வேலூர் அருகேயுள்ள சிறுங்காஞ்சி கிராமத்தில் கோயில் திருவிழாவால் ஏற்பட்ட முன்விரோதத்தில் இளைஞர் தாக்கப்பட்டார். இதையடுத்து, வேலூர் தெற்கு காவல் நிலையத்தை கிராம மக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனர்.

  சிறுங்காஞ்சியில் இம்மாதம் 5 முதல் 7-ம் தேதி வரை கோயில் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி நடந்த தேர் வீதியுலாவின்போது, ஒரு சமூகத்தைச் சேர்ந்த இரு தரப்பினருக்குள் மோதல் ஏற்பட்டது.

  இதுதொடர்பாக சதுப்பேரியைச் சேர்ந்த சிலர் கிராம ஊராட்சி மன்றத் தலைவர் துரைமுருகனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அரியூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.

  இந்நிலையில், சிறுங்காஞ்சியைச் சேர்ந்த வேலு மகன் சதீஷ் (25), தனது மகனை வேலூரில் உள்ள பள்ளிக்கு ஆர்.என்.பாளையம் வழியாக வெள்ளிக்கிழமை காலை அழைத்து வந்தார். அப்போது சதுப்பேரியை சேர்ந்த சங்கர் மகன் சதீஷ் என்பவர் தாக்கினாராம். தகவல் அறிந்த சிறுங்காஞ்சியை சேர்ந்த கிராமத்தினர் ஊராட்சி மன்றத் தலைவர் துரைமுருகன் தலைமையில் வேலூர் தெற்கு காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.சதீஷ் மீது தாக்குதல் நடத்திய மற்றொரு சதீஷ் மீது தெற்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து கிராமத்தினர் கலைந்து சென்றனர்.

  தலைமறைவான சதுப்பேரியைச் சேர்ந்த சதீஷை போலீஸார் தேடி வருகின்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai