சுடச்சுட

    

    காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும்

    By வேலூர்,  |   Published on : 13th July 2013 03:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வேலூர் மாவட்டத்தின் குடிநீர் பிரச்னையைத் தீர்க்க, ஒகேனக்கல் காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியது.

    வேலூர் டவுன் ஹாலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சங்கத்தின் ஆண்டு பேரவைக் கூட்டத்தில், மேற்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்துக்கு அதன் தலைவர் மு.சோமசுந்தரம் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலர் அ.ஜெயராமன், துணைத் தலைவர் ஆர்.முருகன், செயலர் ஊ.ச.காரழகன், பொருளாளர் எஸ்.எம்.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் பொது சேவைக்காக உதவும் உள்ளங்கள் ஒருங்கிணைப்பாளர் பெருமாள், தமிழ் தொண்டுக்காக கவிஞர் வி.ஆர்.சிவஞானவள்ளல் உள்ளிட்டோர் பாராட்டு பெற்றனர்.

    1.1.2013 முதல் 8 சதவீத அகவிலைப் படியை உயர்த்திய முதல்வருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. 1.6.1988 முதல் 31.12.1995 வரை ஓய்வு பெற்றவர்களுக்கு உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள சாதகமான தீர்ப்பை அமல்படுத்த முதல்வரை கோருதல், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், ஓய்வூதிய திருத்தம் குறித்த அரசு ஆணைகளில் உள்ள முரண்பாடுகளை நீக்க மாநில சங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்களும் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai