Enable Javscript for better performance
சோளிங்கரை அடுத்த கல்லாலங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிகாமணி (48). இவர் அப்பகுதியின் அதிமுக கிளை செயலாளராக இருந்தார்.- Dinamani

சுடச்சுட

  

  சோளிங்கரை அடுத்த கல்லாலங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிகாமணி (48). இவர் அப்பகுதியின் அதிமுக கிளை செயலாளராக இருந்தார்.

  By வாலாஜாபேட்டை  |   Published on : 13th July 2013 03:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சோளிங்கரை அடுத்த கல்லாலங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிகாமணி (48). இவர் அப்பகுதியின் அதிமுக கிளை செயலாளராக இருந்தார்.

  இவர் தனது வீட்டு வாசலில் வியாழக்கிழமை நின்றுகொண்டிருந்தார். அப்போது கொடைக்கல்லில் இருந்து ரெண்டாடி நோக்கி செல்லும் டவுன் பஸ் அந்த வழியாக வந்தது. அதே சமயம் ரெண்டாடியில் இருந்து கொடைக்கல் செல்லும் தனியார் பேருந்து எதிரில் வந்தது.

  இரண்டு பஸ்களும் செல்வதற்கு இடம் இல்லாததால் தனியார் பஸ்ûஸ அதன் டிரைவர் பின்னோக்கி எடுத்தார். அப்போது அங்கு நின்றிருந்த சிகாமணி மீது பஸ் மோதியது.இதில் காயமடைந்த சிகாமணி சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இறந்த சிகாமணிக்கு அமுதா என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளனர்.

  500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

  வேலூர், ஜூலை 12:அரக்கோணம் ரயில் நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை மாலை  வந்த புதுச்சேரி-திருப்பதி பயணிகள் ரயிலிலிருந்து சுமார் 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

  இந்த அரிசி மூட்டைகளை அரக்கோணம் வட்ட வழங்கல் அலுவலர் எல்.மணி தலைமையிலான வருவாய்த் துறை அலுவலர்கள் பிடித்தனர்.

  முதியவர் தற்கொலை

  வேலூர் தொரப்பாடி எஸ்.ஆர்.எம். நகரைச் சேர்ந்தவர் முதியவர் ராஜசேகரன் (80). இவர் பெண்கள் சிறைச் சாலையின் பின்புறம் உள்ள பாழடைந்த கட்டடத்தில் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுக் கொண்டாராம். இதில், அவர் இறந்தார்.

  சிறையில் கஞ்சா பறிமுதல்

  வேலூர் ஆண்கள் மத்தியச் சிறையில் 125 கிராம் கொண்ட கஞ்சா பொட்டலத்தை சிறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கைப்பற்றினர்.

  அடையாளம் தெரியாத யாரோ சிறை சுற்றுச்சுவர் பகுதியில் இருந்து வீசியிருக்கலாம் என சிறை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

  தொழிலாளி தற்கொலை

  வேலூர் வசந்தபுரம் நல்லான்பாளையம் 2-வது தெருவைச் சேர்ந்தவர் குமார் (22). இவர் வாழை மண்டியில் பணிபுரிந்து வந்தாராம். சில நாள்களாக உடல்நலமின்றி காணப்பட்ட அவர், வெள்ளிக்கிழமை தனது அறையிலிருந்து தூக்கிட்டுக் கொண்டாராம். இதில், அவர் இறந்தார்.

  மூதாட்டி கொலை: இளைஞர் கைது

  ராணிப்பேட்டை, ஜூலை 12: கலவை அருகேயுள்ள மாந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த மறைந்த முனிரெட்டி மனைவி எல்லம்மாள் (70). இவர் தனது தம்பி மகன் ராஜமாணிக்கத்துடன் (35) வசித்து வந்தார்.

  வியாழக்கிழமை இரவு ராஜமாணிக்கம் குடித்துவிட்டு, எல்லம்மாளை தாக்கினாராம். இதில், எல்லம்மாள் மயங்கி விழுந்தார். இதனால், அதிர்ச்சியடைந்த ராஜமாணிக்கம் விறகுகளை எல்லம்மாளின் உடல் மீது போட்டு மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தாராம். இதில், எல்லம்மாள் தீயில் கருகிய நிலையில் இறந்தார்.

  தகவலின்பேரில் கலவை போலீஸார் விசாரணை நடத்தியபோது, மூதாட்டி எரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

  இதையடுத்து, ராஜமாணிக்கம் கைது செய்யப்பட்டார்.

  குண்டர் சட்டத்தில் பெண் கைது

  வாணியம்பாடி, ஜூலை 12: நாட்டறம்பள்ளியை அடுத்த புதுப்பேட்டை கிழக்குமேடைச் சேர்ந்த அலமேலு (36), குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

  சாராய விற்பனை தொடர்பாக, இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரை காவல் ஆய்வாளர் பழனி அண்மையில் கைது செய்து, வேலூர் பெண்கள் சிறையில் அடைத்தார்.

  இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமாரின் பரிந்துரையின்பேரில், அலமேலுவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர்  பொ.சங்கர் உத்தரவிட்டார்.

  பெண் மீது தாக்குதல்: விவசாயி கைது

  வாலாஜாபேட்டை,ஜூலை 12: காவேரிப்பாக்கத்தை அடுத்த பெரும்புலிபாக்கம் சமத்துவபுரத்தைச் சேர்ந்த முனிசாமி மனைவி சுமதி (35). அதே பகுதியைச் சேர்ந்த விவசாயி வெங்கடேசன் (37).

  வியாழன்கிழமை சுமதியின் வீட்டுத் தோட்டத்தில் உள்ள முள்மரத்தை வெங்கடேசன் வெட்டினாராம். இதைத் தட்டிக் கேட்ட சுமதி தாக்கப்பட்டாராம். புகாரின்பேரில் காவேரிப்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிந்து, வெங்கடேசனை கைது செய்தனர்.

  கிரானைட் கற்களுடன் 2 லாரி பறிமுதல்

  காவேரிப்பாக்கம் அருகே கிரானைட் கற்களுடன் 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு, காவேரிப்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

  வாலாஜா அருகேயுள்ள வாணியன்சத்திரம், சுமைதாங்கி பகுதிகளில் வெள்ளிக்கிழமை கனிம வளத் துறையினர் நடத்திய சோதனையில், இவை பறிமுதல் செய்யப்பட்டன. அப்போது லாரி டிரைவர்கள் தப்பி ஓடினர்.

  கோயில்களில் திருட முயற்சி

  வாணியம்பாடி, ஜூலை 12: வாணியம்பாடியை அடுத்த பெரியபேட்டையில் அருகருகேயுள்ள அழகு மாரியம்மன் மற்றும் காளியம்மன் கோயில்களில் வியாழக்கிழமை இரவு பூட்டை உடைத்து, திருட முயற்சி நடைபெற்றுள்ளது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.

  தகவலின்பேரில் டிஎஸ்பி மாணிக்கம் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை செய்தனர். கைரேகை நிபுணர் ஆய்வாளர் செந்தாமரை ரேகைகளை பதிவு செய்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai