சுடச்சுட

    

    வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் சிறைத்துறை டிஐஜி கோவிந்தராஜ் வெள்ளிக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சிறையில் இரு செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    வேலூர் மத்திய சிறையில் கடந்த 2 ஆண்டுகளாகத் தொடர்ந்து செல்போன்கள், கஞ்சா ஆகியன கைப்பற்றப்பட்டு வருவது அதிகரித்துள்ளது. வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.விஜயகுமார் அண்மையில் நடத்திய ஆய்விலும், செல்போன்கள், சிம்கார்டுகள் மற்றும் கஞ்சா ஆகியன கைப்பற்றப்பட்டன.

    இதைத் தொடர்ந்து, சிறை நிர்வாகத்தினரே அடிக்கடி வளாகத்தில் திடீர் ஆய்வு நடத்தி வருகின்றனர். இதில், 15-க்கும் மேற்பட்ட செல்போன்கள் கடந்த ஒரு மாதத்தில் கைப்பற்றப்பட்டுள்ளன.

    இந்நிலையில், சிறைத்துறை டிஐஜி கோவிந்தராஜ் சிறையில் வெள்ளிக்கிழமை காலை திடீர் ஆய்வை மேற்கொண்டார். சிறை கண்காணிப்பாளர் அறிவுடைநம்பி, கூடுதல் கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார், வார்டன்கள் அடங்கிய குழுவினர் சிறை வளாகம் முழுவதும் சோதனை மேற்கொண்டனர். இதில், 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, சிறைக்குள் செல்போன் மற்றும் கஞ்சா கொண்டு செல்லப்படுவதைக் கட்டுப்படுத்த தொடர்ந்து ஆய்வு நடத்துமாறு சிறை அதிகாரிகளை டிஐஜி கேட்டுக் கொண்டார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai