சுடச்சுட

    

    குடியாத்தம் நகராட்சி 20-வது வார்டு அதிமுக நகர்மன்ற உறுப்பினர் ஆர்.கே. அன்பு தன் சொந்த செலவில் சுமார் 2 ஆயிரம் மாணவர்களுக்கு ரூ.1 லட்சம் மதிப்புள்ள இலவச குறிப்பேடுகளை வெள்ளிக்கிழமை வழங்கினார்.

    தென்குளக்கரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கே.சி. வீரமணி இந்நிழ்ச்சியைத் தொடங்கி வைத்தார் .

    எம்எல்ஏ கு. லிங்கமுத்து, நகர்மன்றத் தலைவர் அமுதாசிவப்பிரகாசம், அதிமுக நகரச் செயலர் ஜே.கே.என். பழனி, அவைத் தலைவர் வி.என். தனஞ்செயன், நகர்மன்ற உறுப்பினர்கள் வி.என். கார்த்திகேயன், ஆர். மூர்த்தி, பூங்கோதைமுனியப்பன், வி.ஜி. பழனி மற்றும் பி.கே. அரிபாபு, ஆர். ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    ராபின்சன் குளம் பார்வை

    பின்னர் ரோட்டரி சங்கம் சார்பில் தூரெடுக்கப்பட்ட ராபின்சன் குளத்தை அமைச்சர் வீரமணி பார்வையிட்டார். அதில் ரூ. 2 கோடியில் செயல்படுத்தப்படும் புனரமைப்புப் பணிகள் குறித்தும் கேட்டறிந்தார். நகராட்சி ஆணையர் ஜி. உமாமகேஸ்வரி, ரோட்டரி சங்கத் தலைவர் டி.என். ராஜேந்திரன், செயலர் வி. மதியழகன், நிர்வாகிகள் என்.எஸ். குமரகுரு, டி. ராஜேந்திரன், கே.எம். ராஜேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai