சுடச்சுட

  

  தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் நாளை கோடிநாம ஜப வேள்வி

  By வாலாஜாபேட்டை  |   Published on : 14th July 2013 02:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வாலாஜா அருகேயுள்ள கீழ்புதுப்பேட்டை ஸ்ரீதன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில், கோடி நாம ஜெப வேள்வி திங்கள்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

  தீவிரவாதத்தை முற்றிலும் அகற்றுவதற்கும், அனைவரின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுவதற்கும், தொற்றுநோய்கள் அகலவும், வறட்சி நீங்கவும், இயற்கைச் சீற்றங்களால் பேரிழப்பு ஏற்படாமல் இருக்கவும் இந்த வேள்வி நடைபெறுகிறது என்று பீடாதிபதி முரளிதர சுவாமிகள் தெரிவித்தார்.

  ஊஞ்சல் சேவை

  வாலாஜா அருகேயுள்ள கீழ்புதுப்பேட்டை ஸ்ரீதன்வந்திரி ஆரோக்கியப் பீடத்தில், தன்வந்திரி பகவானின் உற்சவருக்கு ஊஞ்சல் நடத்தப்பட்டது.  ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் அன்னதானம் வழங்கபட்டது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai