சுடச்சுட

    

    பள்ளியில் புதிய வகுப்பறை கட்டடம்:எம்எல்ஏ திறப்பு

    By வேலூர்  |   Published on : 14th July 2013 04:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வேலூர் அரசினர் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் 2 வகுப்பறைகள் அடங்கிய கட்டடத்தை வேலூர் சட்டப் பேரவை உறுப்பினர் டாக்டர் வி.எஸ்.விஜய் சனிக்கிழமை திறந்து வைத்தார்.

    சட்டப் பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.5 லட்சத்தில் கட்டப்பட்ட இக்கட்டட திறப்பு விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியை பைரோஸ்பேகம் தலைமை தாங்கினார்.

    பள்ளியின் நுழைவாயில் முக்கிய சாலைப் பகுதியில் அமைந்துள்ளதால் அடிக்கடி மாணவ, மாணவியர் விபத்துக்குள்ளாகின்றனர். இதைத் தடுக்க மாற்று இடத்தில் நுழைவாயில் அமைக்க உதவி புரிய வேண்டும் என பள்ளி நிர்வாகத்தில் கோரிக்கை வைத்தனர். அதை ஏற்றுக் கொண்ட எம்எல்ஏ, மாசிலாமணி சாலையில் நுழைவாயில் அமைக்க தேவையான நிதியை தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்வதாக விஜய் உறுதி அளித்தார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai