Enable Javscript for better performance
மணல் கடத்தல்: வி.ஏ.ஓ. மீது தாக்குதல்; ஒருவர் கைது - Dinamani

சுடச்சுட

    

    மணல் கடத்தல்: வி.ஏ.ஓ. மீது தாக்குதல்; ஒருவர் கைது

    By வாலாஜாபேட்டை  |   Published on : 14th July 2013 02:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பனப்பாக்கம் அருகே மணல் கடத்தலைத் தடுத்த கிராம நிர்வாக அலுவலரை (வி.ஏ.ஓ.) தாக்கியதாக ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.

    தகவலின்பேரில் கல்பலாம்பட்டு ஆற்றுப்பகுதியிலிருந்து மண்டல துணை வட்டாட்சியர் ஜெயந்தி, கிராம நிர்வாக அலுவலர்கள் பிரபு (நெடும்புலி), முரளி ( உத்திரம்பட்டு), தேவராஜன் (ஆயர்பாடி), வேலு (பன்னியூர்) உள்ளிட்டோர் சம்பவ இடத்தில் சோதனை நடத்தினர்.  அப்போது அவ்வழியாக மணல் ஏற்றி வந்த டிராக்டரை மடக்கி விசாரணை நடத்தினர். அப்போது டிராக்டரில் இருந்த மூர்த்தி, நித்யானந்தம், சிவா, ராஜ்சேகர், ஆகியோர் கிராம நிர்வாக அலுவலர் தேவராஜை தாக்கி அங்கிருந்த குட்டையில் தூக்கி வீசினராம். இதில் காயமடைந்த தேவராஜ் வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  இதுகுறித்து நெமிலி போலீஸார் வழக்குப் பதிந்து, கல்பலாம்பட்டைச் சேர்ந்த  சேர்ந்த மூர்த்தியை (45) கைது செய்தனர். மேலும், சிலரை தேடி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai