Enable Javscript for better performance
விஐடியில் வேலைவாய்ப்பு பயிற்சிகள்- Dinamani

சுடச்சுட

    

    விஐடி, ஐதராபாத்தில் உள்ள மத்திய அரசின் தேசிய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் பயிற்சி மையத்துடன் இணைந்து கிராமப்புற வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்க உள்ளது.

    ஆடை அலங்கார பயிற்சி, காளான் வளர்ப்பு பயிற்சி, கணினி மற்றும் இணையதள பயன்பாடு குறித்த பயிற்சி ஆகியன திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலையில் உள்ள மலைவாழ் மக்களுக்காகவும், உணவு பதப்படுத்துதல் பயிற்சி, தோல் பொருள்கள் தையல் பயிற்சி வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு வட்டாரத்திலும், கேட், கேம் பயிற்சி மற்றும் புகைப்பட கலை பயிற்சி வேலூர் விஐடி வளாகத்திலும் நடைபெறுகிறது.

    இப்பயிற்சிக்கான நேர்முக தேர்வுக்கு நேரிலோ அல்லது தொலைபேசி எண்.0416-2202156-ல் இம்மாதம் 22-ம் தேதிக்குள் தொடர்புகொண்டு பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    பயிற்சியில் சேர குறைந்தபட்ச தகுதி 10-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை (தேர்ச்சியடைந்தவர்கள் மற்றும் தேர்ச்சியடையாதவர்கள்). வயது வரம்பு 18 வயது முதல் 35 வயதுக்குள்.

    நேர்முக தேர்வுக்கு வரும்போது கல்விச் சான்றிதழ் (அசல் மற்றும் 2 செட் நகல்) மற்றும் 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ கொண்டு வர வேண்டும். பயிற்சியின் இறுதியில் மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும்.

    தொழில் தொடங்க விரும்புவோருக்கு அரசின் மாõய திட்டங்களை பற்றி ஆலோசனையும், திட்ட அறிக்கை தயாரிக்க பயிற்சியும் அளிக்கப்படும்.

    அணுக வேண்டிய முகவரி:திட்ட அலுவலர், நிலையான ஊரக வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சிக் கல்வி மையம், விஐடி, வேலூர்-632 014.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai