சுடச்சுட

    

    வந்தவாசி அருகே கூரை வீட்டின் மண்சுவரை உடைத்து 11 சவரன் தங்க நகை திருடு போனது தொடர்பாக, போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    வந்தவாசியை அடுத்த கொரக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (55). இவர் வெள்ளிக்கிழமை இரவு தனது கூரை வீட்டில் குடும்பத்துடன் தூங்கி கொண்டிருந்துள்ளார்.

    பின்னர் சனிக்கிழமை அதிகாலை எழுந்து பார்த்தபோது, வீட்டின் பக்கவாட்டு மண்சுவர் உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும் வீட்டு பீரோவிலிருந்த 11 சவரன் தங்கநகை, ரூ.15 ஆயிரம் பணம் உள்ளிட்டவை திருட்டு போயிருந்ததும் தெரியவந்தது.  டிஎஸ்பி மகேந்திரவர்மன் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai