சுடச்சுட

  

  வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் 55 லட்சம் பேருக்கு யானைக்கால் நோய் தடுப்பு மாத்திரைகள் விநியோகம்

  By வேலூர்,  |   Published on : 14th July 2013 02:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தமிழகத்தில் யானைக்கால் நோய் தடுப்புக்காக வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் திங்கள்கிழமை முதல் 55 லட்சம் பேருக்கு டி.இ.சி. மற்றும் அல்பெண்டசோல் மாத்திரைகள் வழங்கப்படவுள்ளன என்று சுகாதாரத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார்.

  திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் யானைக்கால் நோய் தடுப்புக்கு ஒட்டுமொத்த டி.இ.சி. மற்றும் அல்பெண்டசோல் மாத்திரை வழங்கும் பணியை அவர் சனிக்கிழமை தொடங்கி வைத்து பேசியது:

  தமிழகத்தில் யானைக்கால் நோய் தடுப்புக்காக, வேலூர், திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர், விருதுநகர் மாவட்டங்களில் மாத்திரைகள் விநியோகிக்கும் பணி திங்கள்கிழமை தொடங்குகிறது. இம்மாவட்டங்களில் 55 லட்சம் பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு 1.98 கோடி டி.இ.சி. மாத்திரைகள் மற்றும் 55 லட்சம் அல்பெண்டசோல் மாத்திரைகள் வழங்கப்படவுள்ளன.

  இதற்காக 30,400 தன்னார்வலர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். யானைக்கால் நோய் தாக்கத்தை அறிந்து முன்னெச்சரிக்கையாக மாத்திரை உட்கொண்டால் இந்நோயை முழுமையாக குணப்படுத்த முடியும்.

  2 வயதுக்கு மேல் 5 வயதுக்குட்பட்டோர் தலா ஒரு டி.இ.சி மற்றும் அல்பெண்டசோல் மாத்திரை சாப்பிட வேண்டும். 6 முதல் 15 வயதுக்குட்பட்டோர் 2 டி.இ.சி. மற்றும் ஒரு அல்பெண்டசோலும், 16 முதல் 60 வயதுக்குள்பட்டோர் 3 டி.இ.சி. மற்றும் ஒரு அல்பெண்டசோல் மாத்திரையும் சாப்பிட வேண்டும். 2 வயதுக்குள்பட்ட குழந்தைகள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணிகள், நீண்டநாள் நோய்வாய்ப்பட்டவர்கள் இம்மாத்திரையை சாப்பிடக் கூடாது.

  திருப்பத்தூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.9 கோடியில் அடுக்குமாடி கட்டடம் கட்டப்படவுள்ளது. அத்துடன் டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி ஒன்றும் வழங்கப்படவுள்ளது என்றார் வீரமணி. ஆட்சியர் பொ.சங்கர், எம்எல்ஏ கே.ஜி.ரமேஷ், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் லீலா சுப்பிரமணியம் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai