சுடச்சுட

  

  வேலூரில் குடும்பத் தகராறில் இளம்பெண் தூக்கிட்டு உயிரிழந்தார். அவரது இறப்பு குறித்து கோட்டாட்சியர் விசாரணை நடந்து வருகிறது.

  வேலூர், கருகம்பத்தூரை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி மோகன் (28). இவர் 3 ஆண்டுகளுக்கு முன்பு ரேகாவை (22) மணந்தார். ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. கணவன்-மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்படுவதுண்டாம். இந்நிலையில் சனிக்கிழமை இரவு ரேகா தூக்கில் தொங்கினார்.

  திருமணமாகி 5 ஆண்டுகளுக்குள் ஆவதால், வரதட்சிணை கொடுமையால் தற்கொலை செய்துகொண்டாரா என்பது குறித்து கோட்டாட்சியர் விசாரணை நடந்து வருகிறது. விரிஞ்சிபுரம் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

  ரயிலில் அடிபட்டு பசு மாடு சாவு

  வேலூரில் ரயிலில் அடிபட்டு பசு மாடு உயிரிழந்தது.

  திருப்பத்தி-வேலூர் கண்டோன்மெண்ட் ரயில் ஞாயிற்றுக்கிழமை காலை சேண்பாக்கம் மேம்பாலம் அருகே வந்தது. அப்போது இருப்புப் பாதையின் குறுக்கே சென்ற பசு மீது ரயில் மோதியதில் அதே இடத்தில் உயிரிழந்தது.

  இந்த விபத்தை அடுத்து ரயில் சுமார் 30 நிமிடம் தாமதமாக அந்த இடத்தில் இருந்து புறப்பட்டது.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai