சுடச்சுட

  

  சன்டே மார்கெட்டுக்கு விற்பனைக்கு வந்த விலையில்லா மிக்சி, கிரைண்டர்

  By வேலூர்  |   Published on : 15th July 2013 05:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வேலூரில் சன்டே மார்கெட்டில் அரசு அளித்து வரும் விலையில்லா மிக்சி, கிரைண்டர்கள் விற்பனைக்கு வந்திருந்தன.

  வேலூர் லாங்கு பஜார், மண்டி வீதி அடங்கிய பகுதியில் ஞாயிற்றுக்கிழமைதோறும் சன்டே பஜார் என அழைக்கப்படும் பழைய பொருள்கள் விற்பனை சந்தை நீண்டகாலமாக நடந்து வருகிறது.

  இந்த சந்தையில் சைக்கிள் முதல் கார் வரையிலான வாகனங்களுக்கு உதிரி பாகங்கள்,

  வீட்டு உபயோக பொருள்கள், எலக்ட்ரானிக் பொருள்கள், மூலிகை தைலங்கள், துணிகள், பழங்கால நாணயங்கள், மரத்தளவாடங்கள், புத்தகங்கள் உள்பட விற்பனைக்கு வருவதுண்டு.

  இந்த சந்தைக்கு மாவட்டத்தின் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் வந்து செல்வது வாடிக்கையான ஒன்று.

  14-ம் தேதி காலையில் நடைபெற்ற இந்த சந்தையில் அரசின் விலையில்லா மிக்சி, கிரைண்டர் ஆகியன விற்பனைக்கு வந்திருந்தன. விற்பனை செய்தோரிடம் கேட்டபோது, ஏற்கெனவே மிக்சி, கிரைண்டர்கள் வைத்திருப்போருக்கு அரசு அளிக்கும் விலையில்லா

  மிக்சி, கிரைண்டர் தேவைப்படுவதில்லை என்பதால் அவற்றை பல இடங்களில் விற்கின்றனர். விற்பனைச் சந்தையில் கிடைக்கும் விலையில் பாதிக்கும் குறைவாக கொடுத்து இவற்றை வாங்குகிறோம். இருப்பினும் சன்டே மார்க்கெட்டில் இந்த பொருள்களை வாங்குவதற்கு பலர் தயக்கம் காட்டுகின்றனர். அதனால் வந்த விலைக்கு இதை விற்பனை செய்கிறோம் என்றனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai