சுடச்சுட

    

    சென்னை விருகம்பாக்கம் பிஷப் தோட்டத்தைச்  சேர்ந்த தரும கவுண்டர் மகன் சண்முகம் (60), விபத்தில் இறந்தார்.

    இவர் சனிக்கிழமை இரவு வேலூர் மாவட்டம், திமிரி அருகேயுள்ள பரதராமி கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு பைக்கில் வந்துகொண்டிருந்தார். அப்போது பைக் மீது ஆற்காட்டிலிருந்து ஆரணியை நோக்கி சென்ற வேன் மோதியது.

    இதில், அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    விபத்து குறித்து ஆற்காடு தாலுகா போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

    செம்மரம் கடத்தல்; இளைஞர் கைது

    வாலாஜாபேட்டை,ஜூலை 14: காவேரிப்பாக்கத்தைச் சேர்ந்த பிரகாஷ் (35), செம்மரம் கடத்தியதாக கைது செய்யப்பட்டார்.

    இங்குள்ள மேலபுலம்புதூர் கிராமத்தில் கேட்பாரற்ற நிலையில் லாரி மற்றும் கார் இருந்தன.

    காவல் ஆய்வாளர் சோமசுந்தரம் நடத்திய விசாரணையில், இவ்வாகனங்கள் செம்மரக் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட இருந்ததாகத் தெரிய வந்தது.

    இதுதொடர்பாக பிரகாஷ் கைது செய்யப்பட்டார்.

    ரயில்வே ஊழியர் வீட்டில் திருட்டு

    அரக்கோணம் ஜோதி நகரைச் சேர்ந்த ரயில்வே ஊழியர் ரவி (30). இவர் வெள்ளிக்கிழமை இரவு அதே பகுதியில் உள்ள அண்ணன் வீட்டுக்குச் சென்றிருந்தார்.

    வீட்டின் மாடியில் இவரது குடும்பத்தினர் தூங்கினர்.

    இந்நிலையில், ரவி சனிக்கிழமை வீடு திரும்பியபோது, வீட்டின் முன்பக்கக் கதவு  உடைக்கப்பட்டு, உள்ளேயிருந்த பீரோ திருடு போனது தெரியவந்தது.

    இதையடுத்து, வீட்டிலிருந்து சுமார் 200 அடி தொலைவில் பீரோ இருந்ததும், அதிலிருந்து 5 சவரன் நகைகள் திருடு போனதும் கண்டறியப்பட்டது. புகாரின்பேரில் அரக்கோணம் நகர போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

    இளம்பெண் தற்கொலை

    வேலூர், ஜூலை 14: வேலூர் கருகம்பத்தூரைச் சேர்ந்த தொழிலாளி மோகன் மனைவி ரேகா (22), தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

    ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. குடும்பத் தகராறு காரணமாக, மனமுடைந்த ரேகா சனிக்கிழமை இரவு ரேகா தூக்கிட்டுக் கொண்டாரம். இதில், அவர் இறந்தார். இதுகுறித்து விரிஞ்சிபுரம் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

    ரயில் மோதி பசு சாவு

    திருப்பதி-வேலூர் கண்டோன்மெண்ட் ரயில் ஞாயிற்றுக்கிழமை காலை சேண்பாக்கம் மேம்பாலம் அருகே வந்தது. அப்போது இருப்புப் பாதையின் குறுக்கே சென்ற பசு ரயில் மோதி அதே இடத்தில் உயிரிழந்தது.

    இதையடுத்து, ரயில் சுமார் 30 நிமிடம் தாமதமாக அந்த இடத்தில் இருந்து புறப்பட்டது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai