சுடச்சுட

  

  வேலூர் மாவட்டத்தில் யானைக்கால் நோய் தடுப்பு மாத்திரைகள் விநியோகிக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

  திருப்பத்தூரில் இப்பணியை சுகாதாரத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி தொடங்கி வைத்தார்.

  வேலூர் மாநகராட்சி மக்கான் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் களப் பணியாளர்களுக்கு டி.இ.சி. மாத்திரைகள் மற்றும் அல்பெண்டசோல் மாத்திரைகள் அடங்கிய பையை மேயர் பி.கார்த்தியாயினி வழங்கி மாத்திரை விநியோகத்தைத் தொடங்கி வைத்தார்.

  மாவட்ட பூச்சியியல் வல்லுநர் கோபாலரத்தினம், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் பூங்கொடி, மாநகராட்சி பொறியாளர் தேவக்குமார் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

  ராணிப்பேட்டை தாய்சேய் நல மருத்துவமனையில் ராணிப்பேட்டை எம்எல்ஏ அ.முகமது ஜான் நோய் தடுப்பு மாத்திரைகளை சாப்பிட்டு இப்பணியை தொடங்கி வைத்தார்.

  இதில் நகர்மன்றத் தலைவர் சித்ரா சந்தோஷம், ஆணையர் மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  வேலூர் மாவட்டத்தில் 32 லட்சம் பேருக்கு இந்த மாத்திரை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக களப் பணியாளர்களுக்கு ஏற்கெனவே பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai