Enable Javscript for better performance
விபத்தில் காயமடைந்தவரின் பணத்தை போலீஸில் ஒப்படைத்த 2 பேருக்கு வெகுமதி - Dinamani

சுடச்சுட

    

    விபத்தில் காயமடைந்தவரின் பணத்தை போலீஸில் ஒப்படைத்த 2 பேருக்கு வெகுமதி

    By ஆரணி  |   Published on : 15th July 2013 01:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆரணியில் விபத்தில் காயமடைந்தவரை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு அவரிடமிருந்த ரூ.1 லட்சத்து 43 ஆயிரத்து 200ஐ போலீஸில் ஒப்படைத்த இரண்டு பேருக்கு ஆரணி டிஎஸ்பி ஞாயிற்றுக்கிழமை வெகுமதி அளித்தார்.

    வாலாஜா தாலுகா எருக்கம்பட்டியை சேர்ந்த பலராமன் மகன் மேகநாதன் (38). இவர் ராணிப்பேட்டை முத்துக்கடையில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார்.

    சனிக்கிழமை இரவு டாஸ்மாக் கடையை மூடிய பின்பு வசூல் பணத்தை எடுத்துக்கொண்டு களம்பூரில் உள்ள உறவினர் நிகழ்ச்சிக்கு பைக்கில் சென்றுள்ளார்.

    வழியில் நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைந்த மேகநாதன் மயக்கமடைந்தார். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த மகேஷ், சுரேஷ் இருவரும் மேகநாதனை 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

     மேலும் மேகநாதனிடமிருந்த பணம் ரூ.1 லட்சத்து 42 ஆயிரத்து 200ஐ ஆரணி நகர போலீஸில் ஒப்படைத்தனர் .

    இதையடுத்து அவர்களின் நேர்மையை பாராட்டி ஆரணி டிஎஸ்பி என்.மணி இருவருக்கும் வெகுமதி அளித்தார்.

    எஸ்.ஐ.க்கள், சுந்தரேசன், மகாராணி ஆகியோர் உடன் இருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai