சுடச்சுட

  

  அரசு மருத்துவமனைக்கு ரூ.2.5 லட்சத்தில் ஆழ்துளை கிணறு

  By வேலூர்  |   Published on : 16th July 2013 03:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  : வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிலவும் குடிநீர் பிரச்னையை சமாளிக்க ரூ.2.5 செலவில் ஆழ்துளை கிணறு அமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அணைக்கட்டு எம்எல்ஏ ம.கலையரசு கூறினார்.

  மருத்துவமனைக்கு நாகநதியில் இருந்து தனி குழாய் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

  தற்போது தண்ணீர் வரத்து குறையத் தொடங்கியது.

    இதையடுத்து மருத்துவக் கல்லூரிக்கு திங்கள்கிழமை சென்ற கலையரசு, தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.2.5 லட்சம் ஒதுக்கீடு செய்து உடனடியாக ஆழ்துளை கிணறு அமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

  பின்னர் ஆட்சியர் அலுவகலத்துக்கு வந்த அவர், ஆட்சியரை குறைதீர் கூட்டத்தில் சந்தித்து  மருத்துவமனை வளாகத்தில் நாள் ஒன்றுக்கு 5 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவை. ஆனால் இப்போது 2 லட்சம் லிட்டர் மட்டுமே கிடைக்கிறது. எனவே அப்பகுதியில் ஆழ்துளை கிணறுகள் அமைக்க தேவையான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai