சுடச்சுட

  

  மாணவர்கள் கடின உழைப்பால் மட்டுமே உயர்ந்த நிலையை எட்ட முடியும் என்று வேலூர் மேயர் பா.கார்த்தியாயினி கூறினார்.

  ஆற்காடு அருகே கீழ்விஷாரம் ராசாத்துபுரத்தில் உள்ள சத்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதலாம் ஆண்டு வகுப்புகளை திங்கள்கிழமை அவர் தொடங்கிவைத்து பேசுகையில், மேற்கண்டவாறு கூறினார்.

  விழாவுக்கு முன்னாள் எம்பி ஆர்.மார்கபந்து தலைமை தாங்கினார். எம்எல்ஏ அ.முகமதுஜான், மேல்விஷாரம் நகர்மன்றத் தலைவர் அப்துல்ரஹ்மான், துணைத் தலைவர் இப்ராஹீம் கலிலுல்லா, ராணிப்பேட்டை நகர்மன்ற உறுப்பினர் கே.பி.சந்தோஷம், வேலூர் தந்தை பெரியார் பொறியியல் கல்லூரி முதல்வர் எம்.அருளரசு, சத்யா கல்லூரித் தலைவர் டி.மலர்விழி, செயலர் டி.ரூபாவதி, கல்லூரி ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் எம். புகழேந்தி, முன்னாள் அரசு வழக்குரைஞர் கே.பாலசந்தர், கல்லூரி முதல்வர் கே.பாலாஜி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai