Enable Javscript for better performance
ஏழை இந்து மாணவர்களுக்கு உதவித்தொகை - Dinamani

சுடச்சுட

    

    ிறுபான்மை மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகையைப் போன்று, ஏழை இந்து மாணவர்களுக்கும் வழங்குவதற்கு அரசை வலியுறுத்தக் கோரி, வேலூர் மாவட்ட ஆட்சியர் பொ.சங்கரை பாஜகவினர் சந்தித்து திங்கள்கிழமை மனு அளித்தனர்.

    பாஜக மாவட்டத் தலைவர் ஏ.செந்தில்குமார், கோட்டப் பொறுப்பாளர் குணசேகரன் உள்ளிட்டோர் இம்மனுவை அளித்தனர்.

    "சலுகைகள் மதத்தின் அடிப்படையில் இருக்கக் கூடாது. சமூக ஏற்றத் தாழ்வுகளின்படியே இருக்க வேண்டும் என்ற அம்பேத்கரின் அடிப்படை அரசியல் சட்டத்தை மதிக்க வேண்டும்.

    சச்சார் கமிட்டி பரிந்துரை அடிப்படையில் சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி மற்றும் பராமரிப்பு உதவித் தொகையை 2007ஆம் ஆண்டு முதல் வழங்கி வருகிறது. இதை இந்து ஏழை மாணவர்களுக்கும் வழங்க வேண்டும்.

    பாஜகவின் இக்கோரிக்கையை அரசு ஏற்காவிடில் ஆகஸ்ட் 3-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த பாஜக இளைஞரணி முடிவு செய்துள்ளது' என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai