சுடச்சுட

  

  காமராஜர் பிறந்த நாள் விழா வேலூர் மாவட்டத்தில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அவரது சிலைகள், உருவப் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

  வேலூர்

  வேலூர் கோட்டை காந்தி சிலை முன் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காமராஜரின் படத்துக்கு காங்கிரஸ் வழக்குரைஞர் பிரிவின் மாவட்டத் தலைவர் ஆர்.கிருஷ்ணகுமார், துணைத் தலைவர் அண்ணாதுரை உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.

  காங்கிரஸ் மனித உரிமை பிரிவின் மாவட்டப் பொதுச்செயலர் எஸ்.ரகுமான் ஏழைகளுக்கு அன்னதானம் அளித்தார். நகர காங்கிரஸ் முன்னாள் தலைவர் வி.வேதகிரி, மாவட்ட மனித உரிமை பிரிவு பொதுச் செயலர் டி.ஆனந்தன், மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் பி.பி.ஜெயபிரகாஷ், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் வாஹிப் பாஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  வேலூர் மாவட்ட காங்கிரஸ் எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவின் மாவட்ட அமைப்பாளர் சி.சிவராஜ் தலைமையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்.

  வேலூர் பேலஸ் கபே அருகேயுள்ள காமராஜர் சிலைக்கு பாமக எம்எல்ஏ ம.கலையரசு,  வேலூர் மாவட்ட காந்தி சமூக நற்பணி மன்றத் தலைவர் ராமச்சந்திரன் ஆகியோர் தனித்தனியே மாலை அணிவித்தனர்.

  ஜனதா கட்சி சார்பில் மாவட்டத் தலைவர் என்.பாலகிருஷ்ணன் தலைமையில், மாநில பொதுச் செயலர் ஏ.வரதராஜன் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாவட்டச் செயலர் கே.காந்தி, வட்டாரத் தலைவர் சி.செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  சத்துவாச்சாரி

  குடியிருப்போர் சங்கம்: சத்துவாச்சாரி வீட்டு வசதி வாரிய குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் நடைபெற்ற விழாவுக்கு, சங்கத் தலைவர் வழக்குரைஞர் பி.டி.சம்பந்தன் தலைமை தாங்கினார். பொருளாளர் ஜி.கே.முரளிகுமார், பொறியாளர் சு.துரை, வி.ராமதாஸ், செயலர் மு.சா.வீரபத்திரன் (எ) தேசபக்தன் ஆகியோர் பங்கேற்றனர்.

  காமராஜர் உருவப் படம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மாலை அணிவிக்கப்பட்டது. மரக்கன்றுகளும் நடப்பட்டன.

  மகளிர் காங்கிரஸ்: சத்துவாச்சாரி பகுதி 2-ல் 15-வது தெருவில் மகளிர் காங்கிரஸ் சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. மாவட்டத் தலைவி கீதா தேசபக்தன் தலைமை தாங்கினார்.

  காட்பாடி

  காட்பாடி காந்தி நகரில் காமராஜர் சிலைக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் ஒன்றியத் தலைவர் ஏ.காமராஜ் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.

  குழந்தைகளுக்கு இலவச சீருடைகள், இனிப்புகள் வழங்கப்பட்டன. முன்னாள் ஊராட்சித் தலைவர் வி.ஜி.ரவிந்தர், மாவட்ட கவுன்சிலர் வி.ஏ.சுகேந்திரன், முன்னாள் ஒன்றியத் தலைவர் டி.வி.சிவனாந்தம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

  நாட்டறம்பள்ளி

  நாட்டறம்பள்ளியை அடுத்த சொரக்காயல்நத்தத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

  முகாமுக்கு இளைஞர் காங்கிரஸின் மக்களவைத் தொகுதி பொதுச்செயலர் டி.வினோத் தலைமை வகித்தார்.

  திருவண்ணாமலை ஸ்ரீரமண மகரிஷி கண் மருத்துவமனையின் மருத்துவக் குழுவினர்  85 பேருக்கு கண் பரிசோதனை செய்தனர்.

  கட்சியின் மாவட்டப் பொதுச்செயலர்கள் பரந்தாமன், அருள், மாவட்ட விவசாயப் பிரிவு தலைவர் வேலாயுதம், இளைஞர் காங்கிரஸின் மக்களவைத் தொகுதி பொதுச்செயலர்கள் ஆர்.கேசவன், தியாகராஜன், உஷா, துணைத் தலைவர் நந்தகுமார், கட்சியின் நிர்வாகிகள் இம்தியாஸ், ஜெகன்நாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

  வாணியம்பாடி

  வாணியம்பாடி கச்சேரி சாலையில் உள்ள காமராஜர் சிலைக்கு காங்கிரஸ் பிரமுகர் கவியரசன் தலைமையில், இளைஞர் காங்கிரஸின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அஸ்லம்பாஷா மாலை அணிவித்தார். பைசல் அமீன் இனிப்புகளை வழங்கினார்.

  நேதாஜி நகரில் ஆமத்கான் தலைமையில் நடைபெற்ற விழாவில், மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்களை அஸ்லம்பாஷா வழங்கினார்.

  கட்சி நிர்வாகிகள் பைசல்அமீன், ஷபிஅகமத், அஸ்வாக், கவியரசு, பரீத்அகமது, ஜப்பார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

  ஆம்பூர்

  ஆம்பூரில் காமராஜர் சிலைக்கு நகர காங்கிரஸ் தலைவர் எஸ். மாணிக்கம் மாலை அணிவித்தார். இளைஞர் காங்கிரஸின் மக்களவைத் தொகுதி முன்னாள் துணைத் தலைவர் எம். அருண்குமார், சட்டப்பேரவைத் தொகுதி முன்னாள் துணைத் தலைவர் எம். நேதாஜி, கட்சியின் மாவட்டத் துணைத் தலைவர் ஜி. குமரேசன், நகர துணைத் தலைவர்கள் என். அமானுல்லா, ஆர். அமர்நாத் ரெட்டியார், பொதுச் செயலர்கள் எம். புவனேஸ்வரன், எம். சமிவுல்லா, பொருளாளர் கே. வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai