Enable Javscript for better performance
குடிநீர் கோரி சாலை மறியல்- Dinamani

சுடச்சுட

    

    குடிநீர் விநியோகம் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    மாநகராட்சி 49-வது வார்டை சேர்ந்த ஜீவா நகரில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து குடிநீர் பிரச்னை நிலவுகிறது. டேங்கர் லாரி மூலம் விநியோகம் செய்யப்பட்டு வந்த குடிநீரையும் மாநகராட்சி நிர்வாகம் அண்மையில் நிறுத்தி விட்டதாம்.

    இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் திரளானோர் தொரப்பாடி பழைய பேரூராட்சி அலுவலகம் எதிரே சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.

    போக்குவரத்து தடைப்பட்டதை அடுத்து பாகாயம் காவல் நிலையப் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

    மாநகராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்து உடனடியாக குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக காவல் துறையினரும், வருவாய்த் துறையினரும் உறுதியளித்ததை அடுத்து மறியல் கைவிடப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai