Enable Javscript for better performance
குறைதீர் கூட்டத்தில் ரூ.14 லட்சம் நலத்திட்ட உதவி - Dinamani

சுடச்சுட

    

    வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் ரூ.14 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் பொ.சங்கர் திங்கள்கிழமை வழங்கினார்.

    குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 589 மனுக்கள் பெறப்பட்டன. இவற்றின் மீது துறை அலுவலர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

    குடியாத்தம் உழவர் சந்தையை அகற்றும் எண்ணத்துடன் குடியாத்தம் நகர்மன்றத் தலைவர் செயல்பட்டு வருகிறார். உழவர் சந்தையை மாற்று இடத்தில் தொடர்ந்து நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என உழவர் சந்தை விவசாயிகள் சிலர் ஆட்சியரை சந்தித்து முறையிட்டனர்.

    தனக்கு மூதாதையர் வழியில் வந்த வீட்டுமனையை சிலர் போலி ஆவணம் தயாரித்து விற்றுவிட்டதாகவும், இது தொடர்பாக பலமுறை வருவாய்த் துறையினருக்கும், காவல் துறையினருக்கும் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. உடனடியாக அந்த சொத்தை மீட்டுத் தர வேண்டும் என பென்னாத்தூரை சேர்ந்த முதியவர் ராஜா ஆட்சியரிடம் மனு அளித்தார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் சாண எரிவாயு கலன் அமைப்பதற்கு 14 பேருக்கு தலா ரூ.8 ஆயிரம் மானியத் தொகை வழங்கப்பட்டது. மேல்மொணவூர் இலங்கை தமிழர் முகாமில் வசிக்கும் 9 பேருக்கு மாதாந்திர உதவித் தொகைக்கான உத்தரவுகள் வழங்கப்பட்டன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai