தூக்கில் மாணவர் சடலம்: விசாரணை கோரி சாலை மறியல்
By வேலூர், | Published on : 16th July 2013 03:09 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
காட்பாடி அருகே மாணவர் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து அவரது இறப்பு குறித்து விசாரணை நடத்த வலியுறுத்தி உறவினர்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பழைய காட்பாடி பகுதியைச் சேர்ந்தவர் சங்கர். டெல் தொழிற்சாலையில் பணி புரிந்து வருகிறார். இவரது மகன் சந்தோஷ் (14) அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
ஞாயிற்றுக்கிழமை மாலை சந்தோஷ், தனது தந்தை கட்டிவரும் புதிய வீட்டை பார்க்கச் சென்றாராம். இரவு வரை திரும்பி வராத நிலையில், பெற்றோர் அங்கு சென்றபோது, சந்தோஷின் சடலம் அக்கட்டட அறை ஒன்றில் தூக்கில் தொங்கி நிலையில் இருந்ததாம்.
காட்பாடி காவல் நிலையப் போலீஸார் வழக்குப் பதிந்து சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
சாலை மறியல்: இந்நிலையில், திங்கள்கிழமை பிற்பகல் பிரேத பரிசோதனைக்குப் பிறகு சடலத்தை திரும்பப் பெற பெற்றோர் மற்றும் உறவினர்கள் மறுப்பு தெரிவித்து காட்பாடி-சென்னை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
காட்பாடி காவல் நிலைய போலீஸார் அவர்களை சமாதானம் செய்தனர்.
அப்போது, மாணவர் சந்தோஷ் சாவில் மர்மம் உள்ளதாக உறவினர்கள் புகார் தெரிவித்தனர். போலீஸார் உரிய விசாரணை நடத்துவதாக உறுதி அளித்ததை அடுத்து மறியல் கைவிடப்பட்டது.