சுடச்சுட

  

  காட்பாடி, காந்தி நகர் 10-வது பட்டாலியன் தேசிய மாணவர் படை சார்பில் 650 மரக்கன்றுகள் நடும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

  காட்பாடி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பூட்டுத்தாக்கு அரசினர் மேல்நிலைப் பள்ளி, திருவலம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, ஆற்க்காடு அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, ராணிப்பேட்டை பெல் ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளி, சத்துவாச்சாரி ஹோலிகிராஸ் மேல்நிலைப் பள்ளி, சத்துவாச்சாரி எத்திராஜ் மேல்நிலைப் பள்ளி, வேலூர் கிருஷ்ணசாமி மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் 650 மரக்கன்றுகள் நடப்பட்டன.

  காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு என்சிசி முதல் அலுவலர் க.ராஜா தலைமை தாங்கினார். 10-வது பட்டாலியன் ராணுவ வீரர் அவில்தார் சி.அருள், பள்ளி தலைமை ஆசிரியை எல்.செல்வராணி உள்ளிட்டோர்

  பங்கேற்றனர்.

  பிற பள்ளிகளில் நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியில் 10-வது பட்டாலியனை சேர்ந்த என்சிசி ராணுவ வீரர்கள் பங்கேற்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai