சுடச்சுட

    

    மானிய விலையில் விதைகள் விநியோகம் தொடக்கம்

    By குடியாத்தம்,  |   Published on : 16th July 2013 03:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    துவரை அதிவிரைவு பயறு பெருக்குத் திட்டத்தின்கீழ் குடியாத்தம் வட்டாரத்தில் 500 விவசாயிகளுக்கு மானிய விலையில் துவரை விதை, இடுபொருள்கள் விநியோகம் திங்கள்கிழமை துவங்கப்பட்டது.

    குடியாத்தம் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, வேளாண்மை உதவி இயக்குநர் சி. பூங்கோதை தலைமை வகித்தார். விவசாயிகளுக்கு துவரை விதைகள், இடுபொருள்களை ஒன்றியக் குழு உறுப்பினர் கே. ரமேஷ் வழங்கினார்.

    வேளாண்மை அலுவலர் த. ராஜேந்திரன், உதவி வேளாண்மை அலுவலர்கள் வா. ஜெயக்குமார், தா. வெங்கடேசன், கிடங்கு மேலாளர் என். ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    இதுகுறித்து வேளாண்மை உதவி இயக்குநர் சி. பூங்கோதை கூறியது:

    குடியாத்தம் வட்டாரத்தில் 500 ஹெக்டேர் பரப்பில் துவரை பயிரிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக 500 விவசாயிகளுக்கு தலா 10 கிலோ துவரைவிதை, உரம், பூச்சி மருந்துகள் மானிய விலையில் வழங்கப்படுகிறது என்றார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai