Enable Javscript for better performance
மாவட்ட கல்வி அலுவலருடன் சந்திப்பு- Dinamani

சுடச்சுட

    

    : திருப்பத்தூர் கல்வி மாவட்ட இளம் செஞ்சிலுவைச் சங்க நிர்வாகிகள், புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்டக் கல்வி அலுவலர் டி.மனோகரனை சந்தித்தனர்.

    மாவட்ட அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன், மாவட்டப் பொருளாளர் எஸ்.நாகராஜன், செயற்குழு உறுப்பினர்கள் ஏ.ஆனந்தன், சி.சுப்பிரமணி, எம்.தண்டபாணி உள்ளிட்டோர் மனோகரனுக்கு சால்வை அணிவித்தனர். மாவட்ட அளவில் இளம் செஞ்சிலுவைச் சங்க செயல்பாடுகள் குறித்து மனோகரனிடம் அவர்கள் விளக்கினர். ஜூலை முதல் நவம்பர் மாதத்துக்குள் தலைமை ஆசிரியர்கள், இளம் செஞ்சிலுவைச் சங்க கவுன்சிலர்கள், ஜூனியர்களுக்கு சிறப்பு முகாம்கள் நடத்துவது என்றும், ஜெனிவா ஒப்பந்த தினத்தை சிறப்பாக கொண்டாடுவது என்றும், இதற்காக பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி ஆகியவற்றை நடத்துவது என்றும் முடிவெடுக்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai