சுடச்சுட

    

    வேலூர், சத்துவாச்சாரியில் மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழந்தார்.

    சத்துவாச்சாரி, திரு.வி.க.

    நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் கன்னியப்பன். இவரது மகன்  மணிகண்டன் (21). பி.ஏ. படித்துள்ள இவர் வீட்டில் நடைபெறும் கட்டுமானப் பணிக்கு திங்கள்கிழமை சென்றார்.

    இரும்புச் சட்டியில் மணல் எடுத்துக் கொண்டு  கட்டடத்தின் மேலே ஏறும்போது, எதிர்பாராதவிதமாக சாலையோரம் சென்ற மின்கம்பி உரசியதாம்.

    அப்போது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட மணிகண்டன், மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லும் வழியில் இறந்தார்.

    இதுகுறித்து சத்துவாச்சாரி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai